அத்தியாவசிய திருத்தப் பணிகளுக்காக எதிர்வரும் 12ம் திகதி களுத்துறை மாவட்டத்திலுள்ள பெரும்பாலான பிரதேசங்களுக்கு காலை 8.00 மணி தொடக்கம் இரவு 12.00 மணி வரையில் 16 மணி நேர நீர் வெட்டு அமுலில் இருக்கும் என நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, வாதுவை, வஸ்கடுவ,பொதுபிடிய, மொரோந்துடுவ, கட்டுகுருந்த, நாகொடை, பெந்தோட்டை, பயாகலை, வடக்கு மற்றும் தெற்கு களுத்துறை ஆகிய பிரதேசங்களுக்கும் போம்புவள, மக்கொன, கழுவமோதர, மொரகல்ல, தர்கா நகர், அளுத்கமை மற்றும் பிளமினாவத்தை ஆகிய பிரதேசங்களுக்கும் நீர் வெட்டு அமுலில் இருக்கும் என மேலும் தெரவிக்கப்பட்டுள்ளது.