ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 13ம் திகதி பங்களாதேஷிற்கு செல்ல உள்ளார். இரண்டு நாள் பயணமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி இவ்வாறு பங்களாதேஷிற்கு செல்ல உள்ளார் .
குறித்த இந்தப் பயணத்தின் போது அவர் பங்களாதேஷ் பிரதமர் சேய்க் ஹசீனாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதோடு, பங்களாதேஷின் சுகாதார அமைச்சர் உள்ளிட்ட சில அமைச்சர்களுடனும் ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
இந்த பயணத்தின் போது இலங்கைக்கும் பங்களாதேஷிற்கும் இடையில் சில புரிந்துணர்வு உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதியாக பதவி ஏற்றுக் கொண்டதன் பின்னர் முதல் தடவையாக ஜனாதிபதி மைத்திரிபால சிறினே பங்களாதேஷிற்கு பயணம் செய்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
(rizmira)