அமெரிக்காவில் பணி புரிந்த இராணுவ பிரிகேடியரை கைது செய்ய உத்தரவு..

அமெரிக்காவின் வொசிங்டன் நகரிலுள்ள இலங்கை தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றிய பிரிகேடியர் ஜயந்த ரத்னாயக்கவை கைது செய்யுமாறு தூதரகம் சர்வதேச பொலிஸாரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இவரது பதவிக் காலம் முடிந்த பின்னரும் நாட்டுக்குத் திரும்பாமல் தலைமறைவாகியிருப்பதனால் குறித்த இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை இராணுவத்தின் கஜபா படைப்பிரிவில் சேவை புரிந்த பிரிகேடியர் தரத்திலுள்ளவரையே கைது செய்யுமாறு தூதரகம் சர்வதேச பொலிஸாரிடம் கோரியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)