சூரியவெவ மைதான ஊழியர்களின் சம்பளத்தினை வழங்க முன்னர் காற்சட்டைகளை கழற்றுமாறு பணிப்பு…

சுற்றுலா சிம்பாப்வே மற்றும் இலங்கை அணிக்களுக்கு இடையிலான நேற்றைய(10) போட்டிக்கு இடையே சூரியவெவ மைதானத்தில் தற்காலிகமாக பணியாற்றி வந்த பணியாளர்களின் ஆடைகள் மீண்டும் பெறப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

ஒரு நாள் போட்டிகளுக்காக 1000 ரூபாய் நாளாந்த சம்பளத்திற்கு குறித்த பிரதேசத்தில் உள்ள 100 இளைஞர்களுக்கு அதிகமானவர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

எனினும், போட்டியின் இறுதியில் அந்த பணியாளர்கள் அணிந்திருந்த கிரிக்கெட் நிறுவனத்தின் சின்னத்துடனான காற்சட்டைகளை பெற்ற பின்னரே, அதிகாரிகள் சம்பளத்தை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், தற்காலிகமாக பணியாற்றிய பணியாளர்கள் கடும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்ததாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

(rizmira)