பரிமரிப்பு நடவடிக்கை காரணமாக களுத்துறை மாவட்டத்தில் பல பிரதேசங்களில் இன்று(12) 16 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடை அமுலில் உள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி இன்று(12) காலை 8.00 மணி முதல் இரவு 12.00 மணி வரை இவ்வாறு நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது.
இதன்படி, வாத்துவ, வஸ்கடுவ, பொதுபிட்டிய, மொரந்துடுவ, கட்டுகுறுந்த, நாகொட, பெந்தொட்ட, பயாகல மற்றும் வடக்கு மற்றும் தென் களுத்துறை பிரதேசங்களில் இவ்வாறு நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது.
இதனுடன், பொம்புவல, மக்கோன, களுவமோதர, மொரகல்ல, தர்கா நகர், அளுத்கம மற்றும் பிலமினாவத்தை ஆகிய பிரதேசங்களிலும் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது.