பெட் ஸ்கேன் இயந்திரத்தை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி…

மஹரகம அபேக்‌ஷா வைத்தியசாலைக்கு பெட் ஸ்கேன் (PET scan) இயந்திரத்தை கொள்வனவு செய்ய அமைச்சரவை இன்று(12) அனுமதியளித்துள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நோயாளர்களை பரிசோதிக்கத் தேவையான பெட் ஸ்கேன் இயந்திரத்தைக் கொள்வனவு செய்ய, குறித்த வைத்தியசாலை பொதுமக்களின் உதவியை நாட முடிவு செய்ததை அடுத்து இந்நடவடிக்கைக்கு தெரண ஊடக வலையமைப்பின் மணுஷத் தெரண நிகழ்ச்சித் திட்டம் மற்றும் கதீஜா நம்பிக்கை நிதியம் ஆகியவை உதவிக்கரம் நீட்டியது.

இதன்படி சுமார் 20 கோடி ரூபாய்கள் பொதுமக்களிடம் இருந்து, நிதியுதவி அளிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)