அட்டுளுகம பிரதேச இஸ்ஸதீன் படுகொலை வழக்கில் மூவருக்கு மரண தண்டனை விதிப்பு..

கடந்த 12 வருடங்களுக்கு முன்னர் கூர்மையான ஆயுதங்களினால் தாக்குதல் மேற்கொண்டு கொலை செய்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த சந்தேக நபர்கள் மூவருக்கும் மரண தண்டனை விதித்து பாணந்துறை நீதிமன்ற நீதிபதி பத்மினி ரணவக்க குணதிலக இன்று(12) தீர்ப்பளித்துள்ளார்.

2005.11.17 ஆம் திகதி பண்டாரகம அட்டுளுகம பிரதேசத்திலுள்ள மொஹமட் இஸ்ஸதீன் என்பவரை படுகொலை செய்ததற்காக சந்தேகத்தின் பேரில் 7 பேருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

எம்.எல். மொஹமட் சகரியா, ஜே.எம். பாஹிம் மற்றும் எம்.எப். எம். இக்பால் ஆகியோருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)