வைத்திய சபையின் தலைமைப் பதவிக்கு மூவரின் பெயர்கள் முன்வைப்பு..

இலங்கை வைத்திய சபையின் புதிய தலைவர் பதவிக்கு விசேட நிபுணத்துவ வைத்தியர்கள் மூவரின் பெயர்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரம் மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

அவர்களில் மிகவும் தகுதியுள்ள நபர் தேர்வு செய்யப்பட்டு எதிர்வரும் ஓரிரு தினங்களில் குறித்த பதவிக்கு நியமிக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் மேலும் கூறியிருந்தார்.

இலங்கை வைத்திய சபையின் தலைவர் பொறுப்பில் இருந்த பேராசிரியர் காலோ பொன்சேகா கடந்த 07ம் திகதி அவரது பதவிக் காலத்திலிருந்து ஓய்வு பெற்றிருந்த நிலையில் குறித்த பதவிக்கு ஒருவரை நியமிக்கும் அதிகாரம் சுகாதார அமைச்சரையே சாரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)