பதுளை – கொழும்பு நேர அஞ்சல் ரயில் சேவைகள் இரத்து…

பதுளை – கொழும்பு இரவு நேர அஞ்சல் ரயில் சேவை இன்று(13)இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் அறிவித்துள்ளது.

கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி பயணித்த இரவு நேர அஞ்சல் ரயில் தடம் புரண்டதையடுத்து, இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ரயில் பாதை வழமைக்கு திரும்பும் வரை மலையக ரயில் போக்குவரத்து சேவை ஹட்டன் மற்றும் கொட்டகலை ரயில் நிலைங்ளுக்கு இடையே மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில் கட்டுப்பாட்டு அறை முன்னதாக தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

முதல் இணைப்பு:

பதுளை அஞ்சல் ரயில் தடம் புரள்வு..

 

(rizmira)