நால்வர் நம்மை சுற்றி இருக்க ஆணுறுப்பில் அரிப்பு ஏற்படுகிறதா..?

இரண்டு விஷயங்கள் பெரும் தர்மசங்கடத்தை உண்டாக்கும் ஒன்று நால்வர் நம்மை சுற்றி இருக்கும் போது வாயு வெளியேற்றுவது, அடுத்தது பொது இடத்தில் “அங்கே” அரிப்பு ஏற்படுவது.

இந்த இரண்டையுமே அடக்குவதும் கடினம், பொறுத்துக் கொள்வதும் கடினம். அதிலும், ஆண்களுக்கு தொடைகளின் இடுக்கில் ஏற்படும் அரிப்பை காட்டிலும், ஆணுறுப்பில் ஏற்படும் அரிப்பு பெரும் தர்மசங்கடமாகவும், அசௌகரியமான சூழலை ஏற்படுத்தும். ஏன் ஆணுறுப்பில் அரிப்பு ஏற்படுகிறது..? இதன் காரணிகள் என்ன..? இதற்கான சிகிச்சைகள் என்னென்ன..? என்று இந்த தொகுப்பில் காணலாம்….

காரணிகள்

காய்ச்சல்
சிறுநீர் பாதை தொற்று / பிரச்சினை
வீக்கம்
தடிப்புகள்
எரிச்சல் உணர்வு
சிவந்து காணப்படுதல்

பாதிப்புகள்

அலுவலகத்தில் உட்கார முடியாத நிலை ஏற்படுத்தும், நால்வர் மத்தியில் பேசிக் கொண்டிருக்கும் போது நிற்க முடியாத நிலை உண்டாகலாம், சிறுநீர் கழிக்கும் போது அசௌகரியம், தாம்பத்திய வாழ்வில் கூட இது தாக்கங்கள் உண்டாக்கலாம்.

காரணங்கள்

ஆணுறுப்பின் உட்பகுதியில் ஸ்மெக்கா எனும் வெள்ளை துகள் படிமம் சேரும். இதை தினமும் குளிக்கும் போது சுத்தம் செய்ய வேண்டும். இதை சரியாக செய்யாமல் இருந்தால் அரிப்பு உண்டாகலாம்.

இரசாயனங்கள்

நாம் பயன்படுத்தும் சோப்பு, துணி துவைக்கும் டிடர்ஜென்ட், உள்ளாடை சுகாதாரம், இரசாயன பொருள் சேர்க்கை கூட இதற்கான காரணிகளாக இருக்கலாம். இதன் மூலம் உண்டான எதிர்வினை தாக்கமாக இருக்கலாம்.

கருத்தில் கொள்ள வேண்டியவை

அதிக இரசாயன கலப்பு கொண்ட சோப்பு, டிடர்ஜெண்ட் பயன்படுத்த வேண்டாம். இனப்பெருக்க பகுதியில் அழகு சாதன பொருட்கள், பர்ஃபியூம் போன்றவற்றை பயன்படுத்த வேண்டாம். இறுக்கமான உள்ளாடை அணிவதை தவிர்க்க வேண்டும்.
குளிக்கும் போது ஆணுறுப்பை சுத்தமாக கழுவ வேண்டும். ஆரோக்கியமான ஆணுறைகள் பயன்படுத்த வேண்டும். முக்கியமாக மருத்துவர் கூறும் மருந்துகளை சரியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

 

(rizmira)