பொலித்தீன் தடைக்கு மாற்று தீர்வை வழங்குமாறும் அரசிடம் கோரிக்கை..

எதிர்வரும் செப்டம்பர் மாதத்துடன் பொலித்தீன் பைகள், உணவுப் பொதிக்கான பொலித்தீன் தாள் மற்றும் ரெஜிஃபோம் பெட்டிகளின் பாவனைக்கு தடை விதிக்கப்படவுள்ளதனை தொடர்ந்து பொலித்தீன் உற்பத்தியாளர்கள் அரசிடம் நிவாரணம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் தாங்கள் பாதிக்கப்படுவதாகவும், தங்களுக்கான மாற்று தீர்வை வழங்குமாறும் பொலித்தீன் உற்பத்தியாளர்கள் அரசாங்கத்திடம் கோரியுள்ளனர்.

இதற்கிடையில் கண்டி – ஶ்ரீ தலதா மாளிகை வளாகத்தில் இன்று(14) முதல் பொலித்தீன் பாவனைக்கு முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

(rizmira)