குமார வெல்கம தாக்கல் செய்த உரிமை மீறல் மனு நவம்பர் மாதம் விசாரணைக்கு…

நிதி மோசடி விசாரணைப் பிரிவினால் தம்மை கைது செய்யப்படவுள்ளதாகவும் அதனை தடுத்து நிறுத்த இடைக்கால தடையுத்தரவினை பிறப்பிக்குமாறும் கோரி குமார வெல்கம நீதிமன்றில் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு எதிர்வரும் நவம்பர் மாதம் 7ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

குறித்த மனு நேற்று(13), பிரதம நீதியரசர் பிரசாத் டெப் மற்றும் நீதியரசர்களான அனில் குணரட்ன மற்றும் நலின் பெரேரா ஆகியோர் முன்னிலையில் பரிசீலிக்கப்பட்டது.

குமார வெல்கம போக்குவரத்து அமைச்சராக கடமையாற்றிய காலத்தில் இலங்கைப் போக்குவரத்துச் சபைக்கு வாகன உதிரிப் பாகங்கள் இறக்குமதி செய்த போது மோசடிகளில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தாம் கைது செய்யப்படுவதனை தடுக்குமாறு கோரி குமார வெல்கம மனுத் தாக்கல் செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)