நோபல் பரிசு பெற்ற பிரபல சீன எழுத்தாளர் லியு சியாபோ காலமானார்..

சீனாவில் பிரபல எழுத்தாளரும் கடந்த 2010-ம் ஆண்டு சமாதானத்துக்கான நோபல் பரிசு பெற்றவருமான லியு சியாபோ தனது 61 வது வயதில் காலமானார்.

இவர் ஈரல் புற்றுநோய் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சீனாவில் ஜனநாயகம் தொடர்பான ‘சார்ட்டெர் 8’ என்ற நூலை கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியிட்ட காரணத்துக்காக சீன அரசு அவருக்கு 11 வருட சிறைத் தண்டனை விதித்தது.

இந்நிலையில், ஈரல் புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற வேண்டிய அவசியம் ஏற்பட்டதால் ஷென்யாங் நகரிலுள்ள சீன மருத்துவப் பல்கலைக்கழக மருத்துவமனையில் ஈரல் புற்றுநோய் முற்றிய கட்டத்தில் கடந்த மே மாதம் அனுமதிக்கப்பட்டிருந்த லியு சியாபோவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது எனினும் அவர் கிச்சை பலனின்றி மரணம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

(rizmira)