அடடாளைச்சேனை, சாய்ந்தமருதில் தடை! அச்சத்தில் பிரபல அரசியல் தலைவர்

கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் அறிவிக்கப்படவுள்ள நிலையில் பிரபல அரசியல் தலைவருக்கு   அச்சமும் பீதியும் தொற்றிக்கொண்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

அடடளைச்சேனைக்கு செல்வதட்கு- அந்த மக்கள் பிரபல அரசியல் தலைவருக்கு எதிர்ப்பு காட்டிவரும் நிலையில், சாய்ந்தமருது மக்கள் ஒருபடி மேல் சென்று கூக்குரலிட்டு அவரை விரட்ட ஆரம்பித்துள்ளனர்.

இரண்டாவது முறையாக அண்மையில் அவருக்கும் தவிசாளருக்கும் கூக்குரலிட்ட மக்களால் பீதியடையந்த அந்த தலைவர்  , தனது உரையை சுருக்கிக்கொள்ளும் நிலை தோன்றியுள்ளது.

“கிழக்கு தேர்தலில் மீண்டும் வென்று வாருங்கள், இதே அமைச்சை மீண்டும் வழங்கி, அடடளைச்சேனையை மீண்டும் அலங்கரிக்கின்றேன்” என்று அந்த தலைவர் – கிழக்கு மாகான முதலமைச்சருக்கு  கூறப்பட்டுவிட்டது. இது முதலமைச்சருக்கு  பெரும் சங்கடத்தையும் தோல்வி பீதியையும் ஏட்படுத்திவிட்டது.

இதனால்தான், நோன்பு திறப்பு நிகழ்வில் கூட இவர்  கலந்துகொள்ளவில்லையாம் . சிறிய தாயின் மரணம் எனக்கூறி, நிகழ்வுக்கு வர மறுத்து விட்டாராம் .

இந்த நிலையில்தான், சாய்ந்தமருது மக்களும் இந்த தலைவரை  விரட்ட முயல்கின்றனர்.

 

இந்தவேளையில், இந்த தலைவரை  விரட்டும் – தடை விதிக்கும் மூன்றாவது ஊராக மருதமுனை திகளப்போகின்றது.

மருதமுனைக்கான மேயர் பதவி – சாய்ந்தமருது மக்கள் எடுத்துள்ள முடிவால் மாநகரை சபையை அந்த கட்சி  வெற்றிக்கொள்ளாது என்ற எதார்த்தமே மருதமுனை மக்களின் இந்த தீர்மானத்துக்கான காரணமாகும்.

இந்தநிலையில் கிழக்கு தேர்தல் அந்த கட்சிக்கும் தலைவருக்கும்  பலத்த அடியை கொடுக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.