அவுஸ்திரேலியா அருகே 6.1 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம்..

அவுஸ்திரேலியா அருகே பசிபிக் பெருங்கடலில் உள்ள ஒரு தீவு நாடான டோங்காவில், தென் பகுதியில் அமைந்துள்ள நீடா என்ற இடத்தில் இன்று(17) அதிகாலை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

இதனால் வீடுகளில் இருந்த மக்கள் அதிர்ச்சி அடைந்து வெளியேறி தெருக்களில் ஓட்டம் பிடித்தனர். நெடுஞ்சாலைகளில் விரிசல் ஏற்பட்டது.

இது குறித்து வானிலைஆராய்ச்சி மைய அதிகாரிகள் கூறுகையில், 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது.

கடலுக்கு அடியில் 97 கி.மீட்டர் ஆழத்தில் இது உருவானது. இதனால் கடலில் இராட்சத அலைகள் எழுந்தன,

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரங்கள்தெரியவில்லை. சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை என மேலும் அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

 

 

(rizmira)