ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
போலி ஆவணங்களை வௌியிட்ட குற்றச்சாட்டில் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைகள் இன்று(17) இடம்பெற்றன.
குறித்த இந்த மனுவில் முதலாம் மற்றும் இரண்டாவது சாட்சியாளர்களான, ரணில் விக்ரமசிங்க மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
இதன்படி, குறித்த இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு முன்னதாக, நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது.
எனினும், கடமைகளின் நிமித்தம் அவர்களால் நீதிமன்றில் ஆஜராக முடியாதுள்ளதாக, அவர்களது சார்பில் ஆஜரான சட்டத்தரணி சுட்டிக்காட்டியதோடு, இதற்காக பிறிதொரு தினத்தை வழங்குமாறும் அவர் கோரியிருந்தார்.
விடயங்களை ஆராய்ந்த கொழும்பு மேல் நீதமன்ற நீதிபதி நிஸங்க நாணயக்கார, இருவருக்கும் மீளவும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அத்துடன், குறித்த வழங்கு டிசம்பர் 4ம் திகதி முதல் 12ம் திகதி வரை இடம்பெறவுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.