சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார் சங்கா (வீடியோ இணைப்பு)

இலங்கை அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் சங்கக்காரா, இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியோடு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ளார்.

கடந்த 2014ம் ஆண்டு டி20 உலக்கிண்ணத்தோடு 20 ஓவர் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற சங்கக்காரா, சமீபத்தில் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக்கிண்ணப் போட்டிக்குப் பின் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றார்.

இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியோடு சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் தான் விடைபெறப் போவதாக சங்கக்காரா அறிவித்துள்ளார்.

131 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சங்கக்காரா 12271 ஓட்டங்கள் குவித்துள்ளார். இதில் 38 சதமும், 51 அரைசதமும் அடங்கும்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்கள் அடித்தவர்கள் பட்டியலில் ஐந்தாவது இடத்தை பெற்றுள்ளார். சச்சின் டெண்டுல்கர் (15921), ரிக்கி பொண்டிங் (13378), காலிஸ் (13289), ராகுல் டிராவிட் (13288) ஆகியோர் முதல் நான்கு இடத்தில் உள்ளனர்.

[youtube url=”https://www.youtube.com/watch?v=07BmBcDSfik” width=”560″ height=”315″]