சூரியவெவ – மிரிஜ்ஜவில வீதி, ஹம்பாந்தோட்டை மேம்பாலத்துக்கு அருகில் இன்று(19) காலை 8.30 மணியளவில், இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில், ஒருவர் காயமடைந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சூரியவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய நபர், ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை, ஹம்பாந்தோட்டைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.