இலங்கையில் கவனிப்பாரற்ற நிலையிலுள்ள வீடுகளையும், ஏனைய கட்டிடங்களையும் பரிசோதனைக்குட்படுத்தி அவற்றில் குப்பைகள் தேங்கியிருந்து ஆட்கொல்லி நுளம்புகளை உருவாக்கும் நிலைகள் காணப்படின் அவற்றின் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. கடந்த வாரம் கூடிய அமைச்சரவைக் கூட்டத்தின்போது சட்ட அமுலாக்க அமைச்சர் சாகல ரத்னாயக்க மற்றும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தப்பாவும் இணைந்து சமர்ப்பித்த பிரேரணைகளுக்கே அமைச்சரவை இவ்வாறு அங்கீகாரம் வழங்கியுள்ளது. மேலும் மற்றொரு அங்கமாக சைக்கிள்கள் மூலம் சென்று கழிவுப்பொருட்கள் சேரும் இடங்களையும், டெங்கு நுளம்புகள் உருவாக வாய்ப்புள்ள இடங்களையும் பரிசோதிக்க 40 குழுக்கள் அமைக்கப்படவுள்ளன. இக்குழுக்களுக்கு உதவியாக முப்படைகளைச் சேர்ந்தவர்களும் ஈடுபடுத்தப்படுவார்கள். அத்துடன் அவர்களுக்கு முப்பது ஸ்மார்ட் தொலைபேசிகளும் வழங்கப்படும்.அவர்கள் அத்தொலைபேசிகளின் உதவியுடன் பிரச்சினைகளுக்குரிய இடங்களைப் படம் பிடித்து அப்படங்கள் சட்ட நடவடிக்கைகளின் போது சாட்சியங்களாக சமர்ப்பிக்கப்படும்.
சேனக பிபிலே மருந்தகக் கொள்கையை நடைமுறைப்படுத்தி நாட்டிற்குத் தேவையான மருந்து வகைகளில் 85 வீதத்தை உள்நாட்டில் தயாரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென்று அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.…
17 வருடமாக தமக்கு வழங்கிய ஒத்துழைப்பினைப்போன்றே தற்போதுள்ள இளம் வீரர்களுக்கும் வழங்குமாறு இலங்கை அணியின் சிறந்த வீரர்களில் ஒருவரான திலகரத்ன டில்ஷான் அனைவரிடமும் கோரிக்கையொன்றினை முன்வைத்துள்ளார். நேற்றையதினம்(09)…
எதிர்வரும் ஆண்டு மார்ச் மாதத்திற்கு பின்னர், எந்தவொரு நேரத்திலும் பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு அதிகளவிலான சாத்தியங்கள் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போதைய பாராளுமன்றத்தை எதிர்வரும் ஆண்டு மார்ச்…