தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நேற்று (24) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இரத்தமலானை சதொச களஞ்சியசாலைக்கு ஒருகொடவத்தையில் இருந்து கொண்டுவரப்பட்ட கொள்கலனில் கொக்கேயின் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரத்துடன் சதொசவையும் தன்னையும் சம்பந்தப்படுத்தி சுமத்தப்பட்டுவரும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீன் விளக்கமளித்தார்.
இதன்போது அமைச்சர் கூறுகையில், கொழும்புத்துறைமுகத்தில் இருந்து சுங்கத்திணைக்கள அதிகாரிகளின் பரிசோதனையின் பின்னர் மூடி, சீல் வைக்கப்பட்டு ஒருகொடவத்தைக்கு கொண்டுவரப்பட்ட சீனிக்கொள்கலனை வில்பத்துவிலிருந்து கொண்டுவந்ததாக ஆனந்த சாகர தேரர் கூறுவது அவர் ஒரு பொய்காரர் என்பதை நிரூபிக்கின்றது. இந்த விடயத்தில் என் மீது தொடர்ந்தும் அவர் அபாண்டங்களையும் வீண் பழிகளையும் சுமத்தி வருகின்றார்.
கொக்கேயின் விவகாரத்துக்கும் சதொச நிறுவனத்துக்கும் எந்தத் தொடர்புமில்லை. இந்த நிறுவனம் வெளிநாட்டிலிருந்து சீனியை இறக்குமதி செய்யவுமில்லை. வாரா வாரம் டெண்டர் மூலம் சீனியைக் கொள்வனவு செய்கின்றோம். அதே போன்றே இம்முறையும் டெண்டர் மூலம் தெரிவுசெய்யப்படிருந்த நிறுவனமொன்று அந்தச் சீனியை இரத்தமலானை சதொச களஞ்சிசாலைக்கு கொண்டுவந்தவுடன் எமது சதொச ஊழியர்கள் கொள்கலனை திறந்து பார்த்த போது வித்தியாசமான பார்சல்களைக் கண்டு சதொச தலைவருக்கு அறிவித்தனர். அதன் பின்னர் சதொச தலைவரின் அறிவுறுத்தலுக்கமைய சதொச அதிகாரிகள் கல்கிசை பொலிஸ் நிலையத்துக்கு அறிவித்தனர். இதுதான் உண்மை நிலை.
இந்த உண்மை நிலையை திரிவுபடுத்தி எனக்கும் சதொசவுக்கும் எதிராக அபாண்டமான பழிசுமத்தி ஊடகங்களுக்கு ஈனத்தனமான செய்திகளை வழங்கும் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் பிக்குகள் முன்னணியின் செயலாளர் ஆனந்த சாகர ஹிமி இற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடிவெடுத்துள்ளதாக கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
அத்துடன் சதொச நிறுவனம்உரிய நேரத்தில் நாட்டைப் பேரழிவிலிருந்து காப்பாற்றியிருக்கின்றது. நன்மை செய்தவர்களுக்கு இவர்கள் வழங்கும் பரிசு இதுதானா எனக் கேள்வி எழுப்பினார் அமைச்சர் ரிஷாட்?
பிளாஸ்டிக் அரிசி என்ற மாயயயைக் கிளப்பி சதொச நிறுவனத்தின் மீது கடந்த காலங்களில் பழி சுமத்தினர். அதே போன்று இப்போது கொக்கேயின் விவகாரத்துடன் சம்மந்தப்படுத்துகின்றனர். சதொசவின் வளர்ச்சியை பொறுக்க மாட்டாத காழ்ப்புணர்வு கொண்ட சக்திகள் அதற்குக் களங்கம் ஏற்படுத்தம் வகையில் செயற்படுகின்றனர் என்றும் அமைச்சர் கூறினார்.
இச் செய்தியாளர் மாநாட்டில் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் செயலாளர் சிந்தக்க லொக்குகெட்டிகே, சதொச நிறுவனத்தின் தலைவர் டி.எம்.கே.பி. தென்னக்கோன், சீனி இறக்குமதியாளர்களின் உப தலைவர் மற்றும் அந்த சங்கத்தின் ஊடகச்செயலாளர் ஆகியோரும் கலந்து கொண்டு இது தொடர்பில் விளக்கமளித்தனர்.
கொழும்பு துறைமுகத்தில் ஜேசிடி பகுதியில் ஏற்பட்டுள்ள தீப்பிடிப்பினால் அம்பாறை நபர் ஒருவர் பலியாகியுள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலதிக தகவல்களுக்கு காத்திருங்கள்..
வெல்லவாய பிரதேசத்தில் இரு பெண்கள் பொது இடமொன்றில் மோதிக்கொண்டுள்ளனர். நபரொருவரின் மனைவியும் அவர் கள்ளத்தொடர்பை பேணி வந்த பெண்ணொருவருமே இவ்வாறு மோதிக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றனர். இம்மோதலின் போது அந்நபரும்…
(ஃபாஸ்ட் நியூஸ் | கண்டி) – சட்டவிரோமான முறையில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுவந்த சந்தேக நபர்கள் 12 பேர் இன்று (20) நாவலபிட்டி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.