அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அமைச்சர் சாகல ரத்னாயக்கவுடன் இன்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அவர்களது கோரிக்கைகளை முன்வைத்து அதற்கான தீர்மானங்களை விரைவில் அறிவிக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர். கோரிக்கைகளில் மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை(SAITM) மூடுவது முக்கியமானதாகும்.
இப்பேச்சுவார்த்தையை தொடர்ந்து இன்று காலை முதல் முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைநிறுத்தத்தை கைவிட்டு இன்று மாலை 4 மணியிலிருந்து வேலைக்குத்திரும்ப தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை – சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் பற்றி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவால் சுயாதீன நிபுணர்களைக் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம்…
இலங்கை மதுவரித் திணைக்களத்தின் முதலாவது பெண் ஆணையாளர் நாயகமாக ஹெலன் மீகஸ்முல்ல நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தனது கடமைகளை இன்று(18) உத்தியோகப்பூர்வமாக இலங்கை மதுவரித் திணைக்களத்தில் வைத்து பொறுப்பேற்றுள்ளார்.…