கனியவள ஊழியர்கள் நேற்று முன்தினம் முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், நாடு முழுவதுமுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் நிரப்பும் பணிகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன. இதனால், நேற்று முன்தினம் இரவு முதல் பிரதான நகரங்கள் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, சாரதிகளும் பொது மக்களும் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளது.
இந்த நிலையில், எரிபொருள் விநியோகத்தை அத்தியாவசிய சேவையாக கருதி எரிபொருள் விநியோகம் இராணுவத்தால் முன்னெடுக்கப்படவுள்ளது.
அத்தியாவசிய சேவையாக்கப்பட்டுள்ள எரிபொருள் விநியோகத்தை இன்று காலை முதல் இராணுவம் மேற்கொள்ளும் என இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
அதேவேளை ஜனாதிபதி சிறிசேன பொதுமக்கள் எதிர்நோக்கும் கஷ்டங்களை கவனத்தில் கொண்டு உடனடியாக வேலைக்கு திரும்பும்படி கனியவள ஊளியர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டு நிலைமையினை கருத்திற்கொண்டு மேல் மாகாணத்தின் பாடசாலைகளை ஜனவரி மாதம் 11ம் திகதி திறக்கும் வாய்ப்பில்லை என கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்…
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவின் மைத்துனர் ஒருவரை பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர். மாத்தறை பிரதேசத்தில் காணி ஒன்றை கொள்வனவு…
மாகாண சபைத் தேர்தலை துரிதப்படுத்துமாறு எதிர்க்கட்சிகளின் அழுத்தம் வலுப்பெற்றுள்ள நிலையில், தேர்தல் பிற்போடப்படுவதற்கான காரணம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் ஒன்றிணைந்த எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர்களை…