கடந்த இரண்டு தினங்களாக மூன்று கோரிக்கைகளை முன்வைத்து கனியவள ஊழியர்கள் தொடர்ந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் நாளாந்த சேவைகளை முன்னெடுக்கும் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுக்கின்றனர்.நாடு முழுவதும் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதை அவதானிக்ககூடியதாக உள்ளது.
தமது கோரிக்கைகளுக்கு ஏற்றுக்கொள்ள கூடிய தீர்வுக்கான எழுத்துமூல உறுதி கிடைக்கும் வரையில் வேலைநிறுத்தத்தை கைவிடபோவதில்லை என கனியவள ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் விமானங்களுக்கான எரிபொருள் வழங்கும் நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கான மேற்கொள்ளபப்டும் விமான சேவைகள் பாதிப்படையலாம் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலை நீடிக்கும் பட்சத்தில் விமான சேவைகள் முற்றாக ஸ்தம்பிதம் அடையும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான அமெரிக்காவின் முதன்மை துணை உதவி செயலாளர் ஆலிஸ் வெல்ஸ் இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ…
டெஸ்போட், கிரிவெட்டி வழியாக செல்லும் நுவரெலியா – தலவாக்கலை ஏ7 பிரதான வீதியின் போக்குவரத்து தொடர்ந்தும் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 27ஆம் திகதி குறித்த வீதியில் உள்ள…