இராணுவத்தினர் எரிபொருள் விநியோகம் செய்வதில் தடை…………

இராணுவத்தினர் எரிபொருள் விநியோக நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டு  அவ்வேலை ஆரம்பிக்கப்பட்ட போதிலும், அதற்கு தடை ஏற்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் ரொஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
எரிபொருள் பவுசர்கள் வெளியேற முடியாத வகையில் கொலன்னாவை மற்றும் முத்துராஜவெல பகுதியின் நுழைவாயில் வீதிகளில் டயரிலிருந்து காற்று  அகற்றப்பட்ட நிலையிலான பவுசர்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார் .
இராணுவம் தற்போது அந்த தடைகளை தகர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார்.