2003ம் ஆண்டின் இலக்கம் 3ன் கீழான அரச நிதி முகாமைத்துவ சட்டத்திற்கு அமைவாக பாராளுமன்றத்தில் அறிக்கை சமர்பிக்கபப்டுள்ளது. இவ்வறிக்கையின் பிரகாரம் 2016ம் ஆண்டில் பொருளாதார 5.1 சதவீதமாக இருந்த வளர்ச்சிவேகம் இவ்வருடத்தில் முதல் காலாண்டு பகுதியில் 3.8 சதவீததால் வளர்ச்சி அடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.கட்டட நிர்மாணம், அகழ்வு நடவடிக்கைகள், நிதி சேவை காப்புறுதி பணிகள், ஆடைத்தொழிற்துறை, கடற்தொழிற்துறை ஆகிய துறைகளில் ஏற்பட்ட அபிவிருத்தியே இதற்கு காரணமாகும்.
அத்துடன் 2016ம் ஆண்டில் 4 இலட்சத்து 72 ஆயிரத்து 689 மில்லியன் ஆக இருந்த அரசாங்கத்தின் மொத்த வருமானம் 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதமளவில் 5 இலட்சத்து 89 ஆயிரத்து 17 மில்லியன் ரூபாய்களாக அதிகரித்துள்ளது. இந்த காலப்பகுதியில் அரசாங்கத்தின் வரி மற்றும் வரி அல்லாத வருமானம் அதிகரித்தமையே அரசாங்கத்தின் வருமானம் அதிகரிப்பதற்கு காரணமாகும் என்றும் அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது
பிரமிட் திட்டங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட MTFE SL குழுமத்தின் நான்கு தலைவர்களுக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று -12- வௌிநாட்டு பயணத்தடை விதித்துள்ளது. நிதி…
பரீட்சைகள் ஆணையாளர் டபிள்யூ.எம்.என்.ஜே புஸ்பகுமார உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கல்வியமைச்சுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பரீட்சைகள் திணைக்களம் தொடர்பில் இந்த நாட்களில் முன்னெடுக்கப்படும் விசேட விசாரணைகளுக்கமைய இந்த…
பொலன்னறுவை மாவட்ட செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன புதிய தபால் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். இன்று(14) முதல் அமுலுக்கு வரும் வகையில் அவருக்கு இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது