வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க நேற்று தாக்கல் செய்த மூன்று அமைச்சரவை பத்திரங்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
அவற்றில் ஒன்று விசும்பாயவை தனது உத்தியோகபூர்வ இல்லமாக பயன்படுத்த அனுமதி கோரும் அமைச்சரவை பத்திரம்.
இரண்டாவது அமைச்சரவை பத்திரம் தனது ஊழியர் குழுவின் பிரதான அதிகாரியை நியமிக்க அனுமதி கோரியதாகவும்.
மூன்றாவது அமைச்சரவை பத்திரம் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளும்இலங்கை யாத்திரீகர்ளின் நலன் காக்கும் சபையை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர அனுமதி கோரியிருந்தமை.
ஜனாதிபதி மேற்கூறிய மூன்று அமைச்சரவை பத்திரங்களையும் நிராகரித்துள்ளதாக தெரிய வருகிறது.
விசும்பாய இலங்கைக்கு வரும் வெளிநாட்டு அரச தலைவர்களை தங்க வைக்க தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு மட்டுமே ஊழியர்கள் தலைமை அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
(FASTNEWS|COLOMBO) – இலங்கை மத்திய வங்கி அதன் கொள்கை வட்டி விகிதங்களை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது. இதன்போது, மத்திய வங்கியின் நிலையான வைப்பு வசதி விகிதம் (SDFR) மற்றும்…
அரசின் ஒற்றுமையின் சக்தியை காட்டும் விதமான ” மக்கள் சக்தி” ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று நாளை (05) கொழும்பில் இடம்பெற உள்ளது. பாராளுமன்ற வளாகத்திற்கு அருகில் நாளை…
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவசரமாக நேற்றிரவு(13) சிங்கப்பூர் நோக்கி பயணமாகியுள்ளார். வைத்திய பரிசோதனைக்காகவே அவர் சிங்கப்பூர் நோக்கி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் வைத்தியசாலையில்…