கொழும்பு உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் எரிபொருள் விநியோகம் இன்று மாலையளவில் வழமைக்கு திரும்பும் என கனிய எண்ணெய் தொழிற்சங்க ஒன்றிய இணைப்பாளர் ராஜகருண தெரிவித்துள்ளார்.
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட அனைத்து கனியவள ஊழியர்களும் இன்று காலை முதல் சேவைக்கு சமூகளித்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.