வித்யா படுகொலை முதலாவது சந்தேகநபர் சுவிஸ் குமாரை ஊர் மக்கள் பிடித்து மின்கம்பம் ஒன்றில் கட்டி வைத்திருந்த போது, இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அந்த இடத்திற்கு வந்து சுவிஸ் குமாரை மீட்டுச் சென்றதாகவும், பிரதிப் பொலிஸ் மா அதிபர் தொடர்பில் விசாரணை நடத்தி வரும் இரகசிய பொலிஸார் இந்த விடயம் குறித்து விசாரணை நடத்தவில்லை எனவும் பிரதிப் பொலிஸ் மா அதிபரின் சட்டத்தரணிகள் ஊர்காவத்துறை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்து இந்த சம்பவம் தொடர்பிலான கணொளி ஒன்றையும் நீதிமன்றில் சமர்ப்பித்தனர்.
அக்காட்சியை பார்வையிட்ட ஊர்காவத்துறை நீதிமன்ற நீதவான் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மீதான குற்றச்சாட்டை விசாரணைக்கு உட்படுத்தி வாக்கு மூலமொன்றை பதிவு செய்யுமாறு இரகசிய பொலிஸாருக்கு உத்தரவிட்டிருந்தார்.
அதன் பிரகாரம் இரகசிய பொலிஸார் விஜயகலா மகேஸ்வரனிடமிருந்து இன்று வாக்குமூலம்மொன்றை பதிவுசெய்யவுள்ளனர்.