ஒலிம்பிக்கில் 28 பதக்கங்களை வென்று நீச்சல் உலகின் மன்னனாகத் திகழும் மைக்கல் பெல்ப்ஸிற்கும் கணினியால் உருவாக்கப்பட்ட சுறாமீனுக்கும் இடையில் கடலில் நடைபெற்ற 100 மீட்டர் நீச்சல் போட்டியில் சுறா மீன் வெற்றி பெற்றது.
பந்தய இலக்கை முதலில் எட்டுவதில் கணினியால் உருவாக்கப்பட்ட சுறாவுக்கும் அமெரிக்காவின் மைக்கேல் பெல்ப்ஸிற்கும் கடும் போட்டி நிலவியது.
வெள்ளை சுறா , 36.10 வினாடிகளில் இலக்கை எட்டியதுடன் பெல்ப்ஸ், 38.10 வினாடிகளிலேயே பந்தய தூரத்தை எட்டினார்.
மனிதர்களின் சராசரி நீச்சல் வேகம் மணிக்கு 8 முதல் 10 கிலோ மீட்டராக உள்ளதுடன் வெள்ளை சுறா மீன்கள் மணிக்கு 40 கிலோ மீட்டர் வரை நீந்தும் ஆற்றல் பெற்றுள்ளன.
கணினியால் உருவாக்கப்பட்ட குறித்த சுறாவுடன் மீண்டும் போட்டியில் பங்கேற்று, அதனை வீழ்த்த தயாராக இருப்பதாக பெல்ப்ஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உலகக்கிண்ண டி20 கிரிக்கெட் தொடரின் அரையிறுதியில் இந்திய அணியின் அதிரடி வீரர் யுவராஜ் சிங் களமிறங்குவதில் சந்தேகம் எழுந்துள்ளது. உலகக்கிண்ண டி20 கிரிக்கெட் தொடரின் 2வது அரையிறுதிப்…
ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் நால்வர் உள்ளதாகவும், அதில் சிறந்த இரண்டு வீரர்கள் போட்டியில் இணைந்துக் கொள்ளப்படுவதாகவும், இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் இன்று(10) தம்புள்ளையில்…
இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் லஹிரு திரிமன்னே கிரிக்கெட்டிலிருந்து தற்காலிகமாக விலகி ஓய்வு எடுத்து கொள்ள வேண்டும் என இலங்கை கிரிக்கெட் ஏ அணியின் பயிற்சியாளர் அவிஷ்க…