தேசிய ரகர் வீரர் வசீம் தாஜுதீன் 17 மே 2012 ஒரு கார் விபத்தின் பின் மரணமானதாக அறிவிக்கப்பட்டு அவ்வழக்கு மூடப்பட்டது. அன்றைய சக்திவாய்ந்த ஒரு பிரபல அரசியல்வாதியின் மகன் அவரின் மரணத்திற்குப்பின் ஒளிந்திருப்தாக செய்தி வெளியானது. ஆனால் அன்றைய சூழ்நிலையில் அச்செய்தி முடக்கப்பட்டுவிட்டது. அரசு மாற்றதின் பின்னர் இந்த வழக்கு மீண்டும் எடுக்கப்பட்டு இரகசிய பொலிசாரினால் விசாரணை மேட்கொள்ளப்பட்டது. விசாரனையில் அவர் கடும் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெளிவாகியது. இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு இன்று எடுக்கப்பட்ட போது தாஜுதீன் மரணமடைவதற்கு முன்னர் அவரின் காரை பின் தொடர்ந்த வாகனத்திலிருந்த கொலையாளிகளை அடையாளம் கண்டிருப்பதாகவும் அவர்களை தேடுவதாகவும் இரகசிய பொலிசார் நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து நீதிமன்றம் அவர்களின் பிம்பங்களை(images) அரசாங்க பகுப்பாய்வாளருக்கு அனுப்பி அடையாளத்தை உறுதி செய்யுமாறும் பணித்தது. அத்துடன் அந்த அறிக்கையை அடுத்து நடக்க இருக்கும் விசாரணையின் போது சமர்பிக்கும்படியும் கட்டளை இடப்பட்டது.
காத்தான்குடி நகரில் மோட்டார் சைக்கிளில் மறைத்து வைத்துக் கொண்டுவரப்பட்ட கஞ்சாவுடன் நபரொருவரை நேற்று திங்கட்கிழமை கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு போதைப்பொருள் தடுப்புப் புலனாய்வுப் பொலிஸார் தெரிவித்தனர் தமக்குக்…
நுகர்வோர் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் பேரில் 1997 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய நுகர்வோர் விவகார அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. பண்டிகைக் காலத்தை முன்னிட்டு…