களனி, கம்பஹா பிரதேசங்களில்  ஞாயிறு நீர் விநியோகத்தில் தடை  

மின்சார சபையினால் முன்னெடுக்கப்படவுள்ள அத்தியாவசிய பழுதுபார்க்கும் பணிகள் காரணமாக எதிர்வரும் ஞாயிற்றுகிழமை(30) காலை 8 மணி முதல்  மாலை 7 மணி வரை 11 மணித்தியாலங்கள் களனி, கம்பஹா மற்றும் வத்தளை  உட்பட பல பிரதேசங்களில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என நீர் வழங்கல் மற்றும் நீர் வடிகால் சபை தெரிவித்துள்ளது.