வேலைநிறுத்தத்திற்கு தயாராகும் ரயில் என்ஜின் சாரதிகள்

ரயில் என்ஜின் சாரதிகள் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக ரயில் என்ஜின் சாரதிகள் தொழிற்சங்கப் பிரதிநிதி இந்திக்க தொடங்கொட தெரிவித்துள்ளார்..
உரிய நியமன  விதிமுறைகளுக்கு புறம்பான வகையில் ரயில் என்ஜின் சாரதி உதவியாளர்கள் பணியில் சேர்க்கப்பட்டமை மற்றும்  ரயில் என்ஜின்களில் காணப்படும் சில இயந்திரக் கோளாறுகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படாமை ஆகிய காரணங்களுக்காக  இந்த தொழிற்சங்கப் போராட்டம் நடத்தப்படவுள்ளது.
இந்தப் பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக 100க்கும் மேற்பட்ட ரயில்கள் சேவையில் ஈடுபடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.