நோர்வே நிபுணர்களே உமாஓய திட்டத்தை தொடர்வதா  இல்லையா என்பதை தீர்மானிக்கும் சக்தியாக உள்ளனர்  

உமாஓய திட்டம் முன்னைய அரசின் காலத்தில் முறையான எதுவித ஆய்வுகளும் இன்றி ஆரம்பிக்கப்பட்டதால், அது  பாரிய நில வெடிப்புகளையும், கட்டிட வெடிப்புகளையும் ஏற்படுத்தி மக்களுக்கு இன்னலைக்கொடுத்தது.
இதனால் உமாஓய திட்டத்துக்கு பாரிய எதிர்ப்புகள் கிளம்பின. மக்கள் போராட்டங்களை முன்னெடுத்ததுடன் , எதிர்க்கட்சியினரும் அரசியல் ரீதியிலான எதிர்ப்புகளை வெளியிட்டுவந்தனர்.
இதையடுத்து, உமா ஓய திட்டத்தின் அகழ்வுப் பணிகள் இடைநிறுத்தப்பட்டு, நோர்வேயின் விசேட நிபுணர்களைக் கொண்டு ஆய்வு நடத்த தீர்மானிக்கப்பட்டது .
இந்த நிலையில், இலங்கை வந்துள்ள நோர்வே விசேட நிபுணர்கள்  வழங்கும் அறிக்கையின் அடிப்படையில், உமா ஓய திட்டத்தை தொடர்வதா? அல்லது இடைநிறுத்துவதா? என்று தீர்மானிக்கப்படும் என அமைச்சர் மஹிந்த அமரவீர கூறியுள்ளார்.
உமாஓயா குறித்த மேற்பார்வை விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தபோது மஹிந்த அமரவீர இதனைக் கூறியுள்ளார்.