பிரபல ரக்பி வீரர் தாஜூடீன் கொலை சம்பந்தமான விசாரணைக்காக கடந்த மாதம் 27 ஆம் 28 ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு ஷிரந்தி, யோஷித்த ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும் பல்வேறு காரணங்களை முன்வைத்து இருவரும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகவில்லை. தொடர்ந்தும் அவர்கள் அவ்விசாரணையை தவிர்த்து வருகிறார்கள்.
தாஜூடீன் கொலை செய்யப்பட்ட நாளில் அவரது வாகனத்தை பின்தொடர்ந்து சென்ற வாகனம் ஷிரந்தி ராஜபக்சவின் நிறுவனம் ஒன்றுக்கு செஞ்சிலுவைச் சங்கம் வழங்கியது எனவும், இதனால் அவரிடம் விசாரணை நடத்தும் தேவை இருப்பதாகவும் குற்றப் புலனாய்வு திணைக்களம் கூறியுள்ளது.
இதேவேளை, தாஜூடீன் கொலையுடன் ஹெட்டேவத்த சுரேக என்ற பாதாள உலகக்குழு உறுப்பினர் சம்பந்தப்பட்டுள்ளதாக இரகசிய பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அத்துடன் அவர் யோஷித்த ராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்துள்ளதுடன் இந்தச் சம்பவத்தின் பின்னர் அவர் வெளிநாடு சென்றுள்ளதாக தெரியவருகிறது.
இவை பற்றிய மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள வேண்டிய தேவை ஏட்பட்டு உள்ளதால் குற்றப் புலனாய்வு திணைக்களம் அவர்களை ஆஜராகும்படி அழைத்தது. அவர்கள் அவ்வழைப்பை உதாசீனம் செய்து வருவதால், இரகசிய பொலீசார் அவர்களை வழிக்கு கொண்டு வர நீதிமன்ற கட்டளையை பெற நடவடிக்கை எடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாணந்துறை கடலில் நீராடிக் கொண்டிருந்த இளைஞர்களில் இருவர், நீரிழ் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காணாமற்போயுள்ளனர். காணாமற்போன இருவரையும் தேடும் பணிகளில், கடற்படையினர் மும்முரமாய் ஈடுபட்டுள்ளனர்.
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இன்று முதல் மேல் மாகாணத்துக்குள் இயங்கும் ரயில் சேவைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக ரயில் போக்குவரத்து பிரதி முகாமையாளர் காமினி செனேவிரத்ன தெரிவித்துள்ளார்.
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, இன்று (05)…