ஹைலெவல் வீதியின் சுற்று பாதைக்கு அருகில் நேற்றைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பு பிரிவு வாகனம் ஒன்று மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் காயமடைந்து களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காயமடைந்த அவரின் மணிக்கட்டு எலும்பு வெடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளபோதும் அவரது நிலைமை தீவிரமல்ல எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்விபத்து தொடர்பில் பாதுகாப்பு பிரிவு பொலிஸ் அதிகாரி வெள்ளவத்தை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஒக்டோபர் முதலாம் திகதியுடன் தனிமைப்படுத்தல் ஊரடங்கை நீக்க ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -வெளிநாடுகளில் இருந்து வருகைத்தந்து தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட மேலும் 155 பேர் இன்று தனிமைப்படுத்தல் நிறைவடைந்து தங்களின் வீடுகளுக்கு திரும்பவுள்ளனர். இராணுவத் தளபதி…
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு மத்தியில் அமைதியான போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்கும், அவர்கள் தங்கள் குறைகளை கூறுவதை தடுப்பதற்கும் அவசரகாலச் சட்டத்தை மீண்டும்…