ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்தியாவிடம் இருந்து புதிதாகக் கொள்வனவு செய்யப்பட்ட ‘சயுரால’ என்ற ஆழ்கடல் ரோந்துக் கப்பல் இலங்கை கடற்படையினரிடம் கையளிக்கும் வைபவம் நேற்று கொழும்பு துறைமுக கிழக்கு கொள்கலன் முனையத்தில் நடைபெற்றது.
இக்கப்பலின் கட்டளை அதிகாரியாக கப்டன் நிசாந்த அமரோச நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கையின் அரசியல் வரலாற்றில் முதன்முறையாக கப்டனுக்கான ஆணையிடும் அதிகாரத்தை வழங்கியதுடன் கப்பலின் பெயர்ப்பலகையையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திறந்து வைத்தார். அத்துடன் நின்றுவிடாது கப்பலின் இயந்திர அறைக்குள் சென்று அதன் செயற்பாடுகளைப் ஜனாதிபதி பார்வையிட்டார்.
தமிழ் – சிங்கள சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு இன்று முதல் எதிர்வரும 25 ஆம் திகதி வரை பயணிகளுக்கான விசேட பஸ் சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து…
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தனக்கு பிணை வழங்குமாறு கோரி கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் இன்று(24) விண்ணப்பித்துள்ளார். விமல் வீரவங்சவின் மகள் தற்போது…
– கனகராசா சரவணன் – தமிழ் மக்களுடைய காணிகளை சிங்களவர்கள் அபகரித்ததால் நான் விடுதலைப் புலிகளில் இருந்து யுத்தம் செய்தேன். பின்னர் நான் அரசியலுக்கு வந்தேன். எனவே…