இந்த ஆண்டிற்கான உயர் தரப் பரீட்சை இந்த மாதம் 8 ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளதுடன், 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை 20 ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உயர் தரப் பரீட்சை இடம்பெறவுள்ள பரீட்சை நிலையங்களில் டெங்கு நுளம்பு பரவுவதை தடுப்பதற்காக புகை அடிக்குமாறு சுகாதார அமைச்சிடம் கோரியுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் அதிபர்கள் மற்றும் வலய கல்வி பணிப்பாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.