183 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து இலங்கை அணி சுருண்டது..

இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 183 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்துள்ளது.

அதிகபட்ச ஓட்டமாக திக்வெல்ல 51 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

பந்து வீச்சில் அஷ்வின் 69 ஓட்டங்களுக்கு 05 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.

முன்னதாக துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 622 ஓட்டங்களுக்கு 09 விக்கட்டுக்களை இழந்த நிலையில் தனது முதல் இன்னிங்சை நிறுத்திக் கொண்டது.

இந்திய அணி சார்பாக புஜாரா 133 ஓட்டங்களையும், ரஹானே 132 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

இலங்கை அணி சார்பாக ரங்கன ஹேரத் 146 ஓட்டங்களுக்கு 04 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

 

(rizmira)