மலையாளத்தில் லால், ஸ்ரீனிவாசன், சஜிதா ஆகியோர் நடிப்பில் கடந்த 2012-ம் ஆண்டு வெளிவந்த படம் ‘ஷட்டர்’. ஜாய் மேத்யூ இயக்கத்தில் வெளிவந்த இப்படம் பெரிய வெற்றி பெற்றது.
மலையாளத்தில் வெற்றியடைந்த இப்படம் தற்போது தமிழிலும் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இப்படத்தை பிரபல எடிட்டரான ஆண்டனி, திரைக்கதை எழுதி இயக்குகிறார். இப்படத்தில் சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
‘நைட் ஷோ’ என்று இப்படத்திற்கு பெயர் வைத்துள்ளனர். இயக்குனர் விஜய் இந்த படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் உருவெடுத்துள்ளார். இவர் தயாரிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கெனவே, ஆரி-நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘மாயா’ திரைப்படத்திற்கு ‘நைட் ஷோ’ என்று பெயர் வைப்பதாக இருந்தது. பின்னர் ‘மாயா’ என்று பெயர் வைத்துவிட்டனர். தற்போது அந்த தலைப்பை சத்யராஜ் நடிக்கும் இந்த படத்திற்கு வைத்துள்ளனர்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். விரைவில் இசை மற்றும் டிரைலரை வெளியிடப்போவதாகவும் அறிவித்துள்ளனர்.