தெம்பிடிய சுகதானந்த தேரருக்கு கொழும்பு மேல் நீதிமன்றினால் பிணை…

அனைத்து பல்கலைக்கழக பிக்குமார் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் தெம்பிடிய சுகதானந்த தேரரை பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(08) உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதற்கமைய இவரை 10,000 ரூபா ரொக்கப் பிணை மற்றும் 5 இலட்சம் ரூபா சரீரப் பிணைகள் மூன்றில் விடுவிக்க நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

சுகாதார அமைச்சுக்குள் அத்துமீறி நுழைந்து அங்குள்ள சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)