நாட்டின் பல மாகாணங்களில் இன்று பிற்பகல் இடியுடன் கூடிய மழை..

நாட்டின் கிழக்கு , ஊவா, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பிற்பகல் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேற்கு, சப்ரகமுவ, மத்திய, மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யும்.

நாட்டின் பெரும்பாலான இடங்களில் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று திணைக்களம் இன்று(09) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டடுள்ளது.

இரத்தினபுரி, கேகாலை, மாத்தறை , களுத்துறை , பதுளை, திருகோணமலை, மட்டக்களப்பு, வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் மணிக்கு சுமார் 50mm கனமழை பெய்யக்கூடும்.

புத்தளத்திலிருந்து கொழும்பு காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்கரையோரங்களில் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

தென் மாகாணங்களில் மணிக்கு சுமார் 40-50Km வேகத்தில் பலமான காற்று வீசக்கூடும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலமான காற்று வீசக்கூடும். மின்னலிலிருந்து பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு திணைக்களம் அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

 

(rizmira)