தேர்தலில் தோற்றாலும் அடுத்த பிரதமர் ரணிலே – அகில

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியைத் தழுவினாலும் அடுத்த பிரதமராக வரப்போவது ரணில் விக்ரமசிங்கவேயாகும் என கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாம் வெற்றியீட்டுவோம்.  நாடாளுமன்றத் தேர்தலில் தோற்றாலும் நாம் தாம் வெற்றி, வென்றாலும் நாம் தாம் வெற்றி.

ஏனெனில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றுக் கொண்டு நாம் வெற்றியீட்டுவோம்.

அவ்வாறு ஆசனங்களை வெல்ல முடியாவிட்டாலும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு தொகுதி உறுப்பினர்களை இணைத்துக் கொண்டு தேசிய அரசாங்கம் அமைப்போம்.

அத்தேசிய அரசாங்கத்தில் ரணில் விக்ரமசிங்கவே பிரதமராக தெரிவு செய்யப்படுவார்.

19ம் திருத்தச் சட்டத்தில் காணப்படும் அதிகாரங்களுடன் கூடிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க கடமையாற்றுவார் என அகில விராஜ் காரியவசம் அண்மையில் தம்பதெனிய பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது தெரிவித்துள்ளார்.