பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில், சுமார் 06Kg எடையுடைய சிசுவொன்று பிரசவிக்கப்பட்டுள்ளது.
பெந்தொட்ட ஹபுருகல பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதான தாய் ஒருவர் இந்த சிசுவை பிரசவித்துள்ளார்.
சிசேரியன் சத்திர சிகிச்சை ஊடாக குறித்த இந்த சிசு பிரசவிக்கப்பட்டதாகவும் தாயும் சேயும் நலமாக இருப்பதாகவும் வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சிசுவின் எடை 05.980Kg என தெரிவிக்கப்படுகிறது.
சாதாரணமாக பிறக்கும் குழந்தை ஒன்றின் நிறை 3.5Kg என்பதும் குறிப்பிடத்தக்கது.
(rizmira)