கிளிநொச்சி மீனவர்கள் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக, கொழும்பு லோட்டஸ் சுற்றவட்டத்தில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
அதன்காரணமாக, கொழும்பு காலிமுகத்திடலுக்கு செல்லும் வீதி லோட்டஸ் சுற்றுவட்டத்துக்கு அருகில் மூடப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்டுள்ள தம்முடைய காணிகளை மீண்டும் பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுத்தே குறித்த இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கொழும்பு, கோட்டை புகையிரத நிலையத்துக்கு அருகில் இருந்து பேரணியாக சென்ற இரணைத்தீவு மீனவர்கள், தமது பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் மனு கையளிக்க நடவடிக்கை எடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
(rizmira)