அறிவுறுத்தல்களுக்கு அமைய லஹிரு வீரசேகரவுக்கு பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி..

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் லஹிரு வீரசேகரவை பிணையில் செல்ல இன்று(09) கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கக் கூடாது, வன்முறை நடவடிக்கையில் ஈடுபடகூடாது மற்றும் பிணை நிபந்தனைகளை மீறக்கூடாது என, நீதிமன்றம் லஹிருவுக்கு அறிவுறுத்தியுள்ளது.

கடந்த ஜுன் 21ஆம் திகதி, சுகாதார அமைச்சின் அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்து, 9 இலட்சம் ரூபாய்க்கு அதிக பெறுமதியான பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததாக லஹிரு வீரசேகரவுக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்ட லஹிரு, இன்று(09) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

 

(rizmira)