ஆர்ப்பாட்டம் காரணமாக ஒல்கோட் மாவத்தையில் கடும் போக்குவரத்து நெரிசல்..

அங்கவீனமுற்ற இராணுவத்தினர் முன்னெடுத்து வரும் ஆர்ப்பாட்டம் காரணமாக புறக்கோட்டை ஒல்கோட் மாவத்தையில் ஒரு பகுதி தடைப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

தமது ஓய்வூதிய பிரச்சினைக்கு தீர்வொன்றைப் பெற்றுத் தருமாறு கோரி அங்கவீனமுற்ற இராணுவத்தினர் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், இது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தாவிட்டால் தொடர்ச்சியான உண்ணாவிரதம் ஒன்றை ஆரம்பிப்பதாகவும் அங்கவீனமுற்ற இராணுவத்தினர் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)