கொழும்பு நகரில் பேரூந்துகளுக்கான முன்னுரிமை ஒழுங்கை முறை நாளை(15) முதல் பல கட்டங்களின் கீழ் அமுல்படுத்தப்படவுள்ளதாக மாநகர சபை மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
வாரநாட்களில் காலை 6 மணி தொடக்கம் 9 மணி வரையான காலப் பகுதியில் குறித்த இந்த நடைமுறை அமுலில் இருக்கும் என அமைச்சர் குறிப்பிட்டார்.
மொரட்டுவயிலிருந்து கொழும்பு வரையிலும், பத்தரமுல்லையிலிருந்து கொழும்பு வரையான வீதிகளிலும் 3 ஒழுங்குகளை கொண்ட பகுதிகளில் குறித்த முன்னுரிமை ஒழுங்கு நடைமுறைப்படுத்தப்படுவதோடு, குறித்த முன்னுரிமை ஒழுங்கையில் தனியார், அரச பொதுப் பேரூந்துகள், பாடசாலை பேரூந்துகள் மற்றும் வேன்களுக்கும் பயணிக்க முடியும் என அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.
இது தொடர்பான நடத்தப்பட்ட ஆய்வுகள் மற்றும் ஒத்திகைகளின் அடிப்படையில் குறித்த நடைமுறை அமுலுக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
(rizmira)