நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவை பதவி விலகுமாறு கோரிய யோசனை இம்மாதம் (17)ம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அவ்வாறு அவர் பதவி விலகாதவிடத்து (17)ம் திகதிக்கு பின்னர் அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் பாராளுமன்றில் முன்வைக்கப்படும் எனவும் கட்சியின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு தொகுதி உறுப்பினர்களினால் விஜயதாச ராஜபக்ஷவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர திட்டமிடப்பட்டிருந்த நிலையில், குறித்த நம்பிக்கையில்லா தீர்மான யோசனையை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு பிரதமர் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(rizmira)