வடக்கின் காலநிலையில் மாற்றம்

வட மாகாணத்தில் இன்று (15) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேற்கு , தெற்கு , சப்ரகமுவ மாகாணங்களின் சில இடங்களிலும் மற்றும் புத்தளம் மாவட்டத்திலும் ஓரளவு மழை பெய்யக்கூடும் எனவும்  வட மாகணத்தில் மணிக்கு சுமார் 50 மில்லிமீற்றர்  மழை பெய்யக்கூடும் எனவும்  திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.