உலகப்புகழ் பெற்ற பிரிட்டனின் பிக்பென் கடிகாரம் பராமரிப்பு பணிகள் காரணமாக எதிர்வரும் 2021ம் ஆண்டு வரை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அந்த கடிகாரத்தில் பராமரிப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும் கடிகாரம் அமைந்த எலிசபெத் கோபுரத்தில் பழுது பார்த்தல் பணி மேற்கொள்ளவும் பிரிட்டன் அரசு முடிவு செய்ததுள்ளது. இதற்கென தனியாக நிபுணர் குழுவும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, கடிகாரத்தின் செயல்பாடு எதிர்வரும் திங்கட்கிழமை (21) முதல் நிறுத்தப்படுவதாகவும், நான்கு ஆண்டுகள் வரை கடிகாரம் இயங்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிக்பென் பழுது பார்த்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு ரூ. 400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பிரிட்டன் பாராளுமன்ற நிதிக் குழு அறிக்கை தெரிவிக்கிறது.